தமிழ் நடிகர்கள் வருகையால்..! நடுத்தெருவில் நிற்கும் தெலுங்கு நடிகர்கள்..?

தெலுங்கு நடிகர் சங்கம் சார்பில் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் உள்ள ஒரு குழுவினர் ஐதராபாத்தில் உள்ள இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:- “தெலுங்கு சினிமாவில் தமிழ், கன்னடம் போன்ற நடிகர் ,நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கின்றனர். அதனால் நம் தெலுங்கு நடிகர் நடிகைகள் டெக்ட்னிஷன்கள் மற்றும் குணசித்திர நடிகர்கள் நிலைமை கேள்வி குறியாக உள்ளது இதனால் வருமானம் இன்றி வீட்டு வாடகை கூட கொடுக்க பணம் இல்லாமல் கஷ்டப்பட்டுவருகின்றனர்.

மேலும் தெலுங்கு நடிகர் நடிகைகள் ,மற்றும் குணச்சித்தர நடிகர்களை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க யோசிக்கிறார்கள்

சத்யராஜ், விஜய் சேதுபதி, பிரபு,  சினேகா போன்றோர் அப்பா, அம்மா, அண்ணி, தங்கை கதாபாத்திரங்களுக்கும் தமிழ் மொழி நடிகர்களை வரவழக்கின்றனர். அவர்களுக்கு கேரவன், நட்சத்திர ஓட்டலில் ரூம், அதிக சம்பளம் கொடுக்கின்றனர். இதனால் அவர்களுக்கு தெலுங்கு படங்களில் இருக்கும் மோகம் அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். பிறமொழி கலைஞர்களை இறக்குமதி செய்வதால் தெலுங்கு நடிகருக்கு இறக்கும் வாய்ப்பை தட்டிப்பறிக்கிறார்கள் இதனால் எங்கள் குடும்பம் நடுத்தெருவுக்கு வரும் நிலைமையில் இருக்கிறோம். ஆதலால் இனிமேல் தெலுங்கு நடிகர்களுக்கே முன்னுரிமை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல் தமிழ் நாட்டில் பிரபல முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் அதே நாளில் இங்கேவும் ரிலீஸ் ஆகுகிறது தமிழ் நாட்டில் படம் சுமாராக ஓடினாலும் இங்கே வசூல் ரீதியான வெற்றியை அடைகிறது.