பணத்துக்கு விலைபோன விஜய் சேதுபதி..! விவசாயி , வியாபாரிகள் குடும்பம் வீதிக்கு வரும் சூழல்…?

தமிழ் சினிமாவில் பிஸி மேன் நடிகர் என்றால் அது விஜய்சேதுபதி தான் எப்பவுமே கையில் 10 படங்களுக்கு மேல் வைத்திருப்பர் அப்படிப்பட்ட நடிகர் அவர் தமிழ் இன்டர்ஸரில் நல்ல பெயர்கூட இருக்கு ஆனால் தற்போது அவருக்கு எதிராக வணிகர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

விஜய் சேதுபதி தற்போது விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மண்டி என்கிற ஆன்லைன் ஷாப்பிங் ஆப் விளம்பரத்தில் நடித்துள்ளார்.அதற்கு சிறு குறு விவசாயிகள் ,வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுபோல எல்லா பொருட்களையும் ஆன்லைனில் விற்பனை செய்தால் எங்களை போன்று கடைவைத்து வியாபாரம் செய்து வரும் வணிகர் மற்றும் அவர்களின் குடும்பநிலை என்னாவது நாங்கள் பரம்பரை பரம்பரையாக வியாபாரம் செய்து வருகிறோம் எண்கள் குடுப்பத்தோடு நாங்கள் நடுத்தெருவுக்கு தான் வரவேண்டும் இதுபோல் வியாபாரிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கிகொண்டு நடிகர் விஜய் சேதுபதி துணை போனதற்கு கண்டனம் தெரிவிக்க சென்னை வளசரவாக்கத்தில் உள்ள விஜய் சேதுபதி அலுவலகத்திற்கு எதிரில் நவம்பர் 4ம் தேதி போராட்டம் நடைபெறும் வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.