விழுப்புரத்தில் நடந்த பாவம்.. உயிருக்கு போராடியவரை கைவண்டியில் இழுத்து சென்ற அவலம் பிறகு நேர்ந்த பரிதாபம்..?

விழுப்புரம் மாவட்டம் வானுர் அடுத்த ஒழிந்தியாப்பட்டு ஊரை சேர்ந்த மல்லிகா. இவர் புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள செங்கல் சூளையில் வேலை செய்துவருகிறார். நேற்று மல்லிகாவை பார்ப்பதற்காக உறவினரான தங்கை பவுனு (60) மற்றும் அவரது கணவர் சுப்ரமணி (65) சென்றுள்ளனர். அங்கு எதிர்பாராதவிதமாக சுப்ரமணிக்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகனம் இல்லாததாலும் கையில் போன் இல்லாததால் என்ன செய்வது என்றே தெரியாத நிலையில் சூளைக்கு செங்கல் எடுத்து செல்லும் கைவண்டி மூலமாக பாதிக்கப்பட்ட சுப்ரமணியை சுமார் 4 கிலோமீட்டர் கைவண்டியில் எழுத்த்து சென்றுள்ளனர்

வழியில் யாரும் உதவிக்குகூட வரவில்லை இதிலும் கொடுமையவை படிப்பறிவு இல்லாத இந்த மக்களுக்கு கருணை காட்டாமல் இவர் படும் துயரத்தை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதனை பார்க்கும் போது மனிதாபிமானம் எங்கே என்று பலர் வேதனை படுகிறார்கள்.

ஒரு வழியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து இவர் வரும் வழியில் உயிர் இறந்துள்ளார் என்று கூறியுள்ளார். பின்னர் போலீசார் வந்து இறந்து போன சுப்ரமணியை ஆம்புலன்ஸ் மூலமாக அவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.