வண்ணத்துப்பூச்சின் ஓவியம் இவள் ! என்றும் 16 ? அழகை சொல்ல வார்த்தை இல்லை…..

நம் அனைவருக்குமே அழகு என்றால் நினைவுக்கு வருவது ஐஸ்வர்யா ராயின் அழகு தான் . இப்போது வரை உங்களுக்கு தெரிந்த உலக அழகியின் பெயரை சொல்லுங்கள் என்றால் நம் அனைவர் மனதிலும் வரும் முதல் பெயர் ஐஸ்வர்யா ராய் தான்.1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்று இந்தியாவை அதிர வைத்த ஐஸ்வர்யா ராய் 45 வயதிலும் தன்னுடைய அழகிலும், ஃபேஷனிலும், ஸ்டைலிலும் தனி கவனம் செலுத்தி முன்னணி இளம் நடிகைகளையும் திக் முக்காட வைக்கிறார். ஒரு குழந்தைக்கு தாயான பின்பு ஐஸ்வர்யாவின் அழகில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் அவரின் உணவு பழக்கம் . திருமணத்திற்கு பின்பும் பாலிவுட் திரையுலகில் பல இயக்குனர்களும் தேடி சென்று கதை சொல்லி வரும் ஒரு நடிகை என்றால் அதுவும் ஐஸ்வர்யா ராய். இதுவரை இந்தியாவை சேர்ந்த பலரும் உலக அழகி பட்டம் வென்ற போதிலும் ஐஸ்வர்யா ராய்க்கு ரசிகர்கள் கொடுத்த முக்கியத்துவம் வேறு எந்த நடிகைக்கும் கொடுக்கவில்லை என்றே கூறலாம்.


எந்த சோஷியல் மீடியாக்கள் பக்கமும் வராத ஐஸ்வர்யா ராய், கடந்த ஆண்டு தான் இன்ம்ஸ்டாகிராம் பக்கத்தில் தலையை எட்டி காண்பித்தார். காரணம், அவர் மீது வரும் எதிர்மறையான விமர்சனங்களை அவர் எதிர் கொள்ள தயாராக இருந்ததில்லை.அதன் காரணமாக ஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் இவை எல்லாவற்றையும் அவர் தவிர்த்தார். ஐஸ்வர்யா ராயின் எல்லா பிறந்த நாளும் வித்யாசமாக கொண்டாடப்படும். குறிப்பாக திருமணத்திற்கு பிறகு தனது ஒவ்வொரு பிறந்த நாளையும் வெளிநாட்ட கொண்டாட தொடங்கினர் .

           

இந்த வகையில் ஐஸ்வர்யா ராய் இன்று தனது 46 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இந்த அனைத்தும் புகைப்படங்களையும் பார்க்கும் போது ஐஸ்வர்யா அழகில், சிரிப்பில் எந்தவித மாற்றமும் இல்லை. அதனால் தான் அழகு என்றால் ஐஸ்வர்யா ராய் நன் நினைவுக்கு வருகிறார். கடவுள் உலகிலுள்ள அணைத்து பட்டாம்பூச்சிகளின் அழகையும் ஒருவரிடம் கொடுத்துவிட்டார் என்றால் அவள் வேறுயாரும் இல்லை ஐஸ்வர்யா ராய் தான்.