கொடூர மாஞ்சாநூலால் அப்பா கண்முன்னே பலியானது 3 – வயது குழந்தை !…

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த கோபால்.. இவரது 3 வயது மகன் அபினேஷ்வரன்.. கொருக்குப்பேட்டையில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு குழந்தையை அழைத்து சென்றிருந்தார் கோபால். lபைக்கின் முன்னாடி பகுதியில் அவனை உட்கார வைத்து கொண்டு, திரும்பவும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது பைக், கொருக்குப்பேட்டை மீனம்பாள் நகர் பாலத்தில் வந்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில், ஒரு பட்டம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை.. வேகமாக பறந்து வந்து அதன் மாஞ்சா நூல் அபினேஷ்வரனின் கழுத்தில் நறுக்கென சிக்கியது. இதில், கழுத்து அறுத்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இதை பார்த்து பதறிய கோபால், பைக்கை நிறுத்திவிட்டு கதறினார்.

“என் மகனை காப்பாத்துங்க” என்று துடிதுடித்தார்.. சுற்றி இருந்த பொதுமக்களும் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக சென்னை ஆர். கே. நகர் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். போலீஸார் விரைந்து வந்து குழந்தையை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே குழந்தைக்கு ரத்தம் அதிகமாக வெளியேறிவிட்டது. ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டான் என்று சொல்லி விட்டனர்.

எங்கிருந்தோ இருந்து பறந்து வந்த மாஞ்சா நூல், கண்ணிமைக்கும் நேரத்தில் 3-வது குழந்தையின் கழுத்தை அறுத்து உயிரையே காவு வாங்கி விட்டது. இதனால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி விட்ட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.இந்த பரிதாப சம்பவம் பொது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

.