அனிதாவை போல தற்போது காவியாவை காவு வாங்கிய சாலை..! நெஞ்சை பதறவைத்த வீடியோ

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த காவிய என்ற 26 வயது இளம் பெண் கடந்த சனிக்கிழமை தேர்வு எழுதுவதற்காக தனது அண்ணனுடன் பைக்கில் சென்றுள்ளார் அவர்கள் வீட்டில் இருந்து கிளம்பி நெடுஞ்சாலைக்கு வந்தடைந்தனர். அந்த சாலை குண்டும் குழியும் இருந்ததால் சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் வாகனம் சென்றதால் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பின் தொடர்ந்து வந்த பேருந்து காவியாவின் தலையில் ஏறியதால் அவர் சமபவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் காவியாவின் அண்ணன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். தகவலறிந்து சம்பவஇடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .