திருவள்ளுவர் சிலைக்கு ஏற்பட்ட அவமதிப்பு ! தமிழகமே கலங்கியது …….

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் மாட்டு சாணம் வீசியது பெரும் சர்ச்சையாக ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒரு மோசமான செயலால் பொதுமக்கள் கோபம் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் பாஜக, திருக்குறளே ஒரு இந்து சனாதான தர்மத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நூல் என்கிறது. அதேபோல் பல்வேறு குறள்கலில் தெய்வங்கள் இதில் இடம்பெற்றுள்ளன என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகி இருக்கிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழர் விரோதமாக செயல்படும் சமூக விரோதிகளை போலீசார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.இது தொடர்பாக கருத்து , திருவள்ளுவர் மனித குலத்துக்கு பொதுவானவர். யாருக்கும் எதிரானவர் அல்ல. இச்செயல் கடும் கண்டனத்துக்குரியது. அவரது சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர்கள் கண்டனம் மேலும் திருக்குறள் உலகப் பொதுமறை; உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கான தத்துவங்களை சொல்பது; அப்படிப்பட்ட திருக்குறளை தந்த திருவள்ளுவர் சிலையை அவமதிப்பது கண்டனத்துக்குரியது என தலைவர்கள் கூறியுள்ளனர். இந்த திருவள்ளுவர் சிலை அவமதிப்பு விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துஇருக்கிறது.