கணவன் விட்டுசென்றதால் கணவனின் குடும்பத்தினரை பழிவாங்கிவரும் இறந்த மனைவியின் ஆத்மா..! அதிகரிக்கும் பிணங்களின் எண்ணிக்கை…?

உத்தரபிரேத மாநிலம் ஜலல்பூர் மாவட்டம் உள்ள ஹவுஸ்காஸ் என்ற பகுதியைச் சார்ந்தவர் சின்தாஹரன் சவுஹான் (66) இவருக்கு 14-வயதிலே அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. பின்னர் சிலமாதங்களிலே அவர் மனைவி உடல்நிலை பாதிப்பால் இறந்து விடுகிறார்.அதனை தொடந்து செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக கொல்கத்தாவில் உள்ள டினாஜ்புர் என்று பகுதிக்கு செல்கிறார்.

செங்கல் சூளையில் வேலைபார்க்கும் போது அருகில் உள்ள மளிகை கடைக்கு சவுஹான் அடிக்கடி வருவது வழக்கம் அந்த வகையில் அந்த கடைக்கரையிடம் நெருக்கமாக பழகிவந்துள்ளார். இதனால் அந்த மளிகை கடைக்காரர் தன் மகளை சவுஹானுக்கு திருமணம் செய்துவைக்கிறார் இந்த தகவல் சவுஹானின் குடும்பத்தாருக்கு தெரியவந்த்தை அடுத்து சவுஹானை அங்கிருந்து ஊருக்கு வரவழைத்துள்ளனர்

சவுஹான் பிறந்த சென்ற சில நாட்களிலே அவர் மனைவி கணவர் சென்றுவிட்டதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.பின்னர் ஒருவருடம் கழித்து தான் மனைவி தற்கொலை செய்துகொண்டார் என்று சவுஹானுக்கு தெரியவந்தது. ஊருக்கு வந்த சவுஹானுக்கு குடும்பத்தினர் மூன்றாவது திருமணம் செய்துவைத்தனர். திருமணம் ஆனா சிலநாட்களில் சவுஹான் உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்தார். இந்தநிலையில் அப்பா ,அண்ணன் ,அண்ணன் மனைவி மற்றும் அவர்களின் இரு மகன்கள் என அடுத்தடுத்து இறந்துள்ளனர். சில மாதங்களுக்கு பிறகு சவுஹானின் சகோதரரின் மூன்று மகள்கள், மகன் ஆகியோர் திடீரென உயிரிழந்துள்ளனர்.

திடீர் என்று ஒருநாள் தூங்கிய சவுஹான் கனவில் தற்கொலை செய்துகொண்ட மனைவி தோன்றினால் அப்போது அவர் கூறியது நீ என்னை திருமணம் செய்து கொண்டு பாதியில் விட்டு சென்றுவிட்டாய் அதற்க்கு காரணம் யார் உங்க குடும்பத்தினர் தான் அதனால் தான் நான் அவர்களை பழிவாங்குகிறேன் என்று கூறினால். நான் அவளிடம் அழுது மன்னிப்பு கேட்டேன் தயவு செய்து என் குடும்பத்தினர் விட்டு விடு நான் என்னவேண்டுமானாலும் செய்கிறேன் என்று கூறினேன்.

அதற்க்கு இறந்த மனைவி என் ஆத்மாவை உன்னுடன் சேர்த்துக்கொள் மற்றும் நீ தினமும் திருமணமாகும் பெண் போல உடைஅணியவேண்டும் வெளியே சென்றாலும் மணப்பெண் கோலத்தில் தான் செல்லவேண்டும் என்று கூறினால். அதைப்படி நானும் பெண்கள் அணியும் நகைகள், ஆபரணங்கள் போன்றவற்றை அணிந்தபடி வெளியே செல்கிறேன். தற்போது என் உடல் நிலை சரியாகிவிட்டது. மேலும் என் குடும்பத்தில் நடக்கும் தொடர் உயிர் பலி நின்றுவிட்டது.

முதலில் நான் பணப்பெண் போல உடையணிந்து வெளியே செல்லும் போது அனைவரும் கைதட்டி சிரித்தனர். என்னை பையத்தியக்காரன் என்று கூறினார் பல பேர் இவன் மனைவிக்கு செய்த துரோகம் தான் தண்டனை பெறுகிறான் என்று கூறினார்.