ரஜினியை தங்கள் வலையில் சிக்க வைக்க பாஜக கொடுக்கும் திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது..! ஏற்பாரா ..?

திரையில பிரபலமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு புதுடெல்லியில் திரைப்படத் துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கோவாவில் நவம்பர் ( 20 முதல் 28 ) வரை 50ஆவது சர்வதேச திரைப்பட விழா நடக்க இருக்கிறது . இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது . அந்த விருதுக்கு ஐகான் ஆப் தி கோல்டன் ஜூபிளி என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டது. வாழ்நாள் சாதனையாளர் விருது ரஜினிக்கு வழங்கப்படுவதை மத்திய தகவல் மற்றும் ஒலிப்பரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்தார். இந்த விருதானது மிகவும் பெரிய விருதாக பார்க்கப்படுகிறது.

ஒலிப்பரப்புத் துறைஅமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து கூறுகையில் கடந்த பல ஆண்டுகளாக இந்திய திரைத்துறைக்கு ரஜினிகாந்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது எனப்படுவது பல்வேறு அமைப்புகளால் வழங்கப்படும் விருதாகும். இந்த விருதுக்கு மிகவும் தகுதியுடைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஆதலால் அவருக்கு இந்த விருதை வழங்க ந பெருமகிழ்ச்சி உள்ளேன் என்று தெரிவித்தார் .