பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளுக்கு ரூ.6 கோடி..? வரை மின்கட்டணம் செலுத்தும் உள்ளாட்சி அமைப்புகள்..!!

சமீபத்தில் தமிழ் நாட்டையே உலுக்கிய நிகழ்ச்சியான ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3-வயது சிறுவன் சுர்ஜித் இறப்பு இன்னும் நம் மனதில் ஆராய் தழும்பாகவுள்ளது.அந்த துயரத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

அறிவிப்பை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 3000-மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளுக்கு பல வருடங்களாக அந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் லட்சக்கணக்கான ரூபாய் மின்சார கட்டணம் செலுத்தி வருவது தற்போது கண்டுபிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கோவை சார்ந்த நுகர்வோர் வழக்கு செயலாளர் கதிர்மதியன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல். ஊராட்சி நிர்வாகம் மக்கள் குடிநீருக்காக ஆழ்துளை கிண்று தோண்டுவது வழக்கம் அதனுடன் மின்னிணைப்பும் பெறப்படுகின்றன.அதில் கிலோவாட்டுக்கு ரூ. 120 வீதம் கட்டணம் செலுத்தப்படுகிறது. ஆனால் ஆழ்துளை கிணறுகள் 10 கிலோ வாட் திறன் அடிப்படையில் இணைப்புகள் பெறப்பட்டன. கோவை மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 3,396 பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளுக்கு ஒரு யூனிட் கூட மின்சாரம் பயன்படுத்தாத நிலையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 28 லட்சம் மின்சார கட்டணத்தை அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் செலுத்துவது தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து பார்த்தால் தமிழகம் முழுவதும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளுக்கு ரூ. 6 கோடி வரை மின்சார கட்டணம் செலுத்தப்படுவது அதிகாரிகள் தகவலில் இருந்து தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மின்சாரவாரியம் தீவிர விசாரணைமேற்கொண்டு தவறுகளை நிறுத்தவேண்டும் இதனால் தமிழ மக்களுக்கு எவ்வளவு கோடிக்கணக்கில் வருவாயிழப்பு என்று புள்ளிவிவரணகள கூறிவருகிறது.