வீட்டுவாசலில் உட்கார்ந்து தலைவாரிய பெண்.. பக்கத்துவீட்டுக்காரர் செய்த செயல்.. வெளியான சோக சம்பவம்!

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் அருகே உள்ள சருத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் இவர் அதே ஊரை சேர்ந்த கிருஷ்ணவேனி என்னும் பெண்ணை காதலித்து வந்தார் நாளடைவில் இந்த காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்த்தை அடுத்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி பின் திருமணம் செய்துகொண்டு தனியாக வழந்துவந்தனர். இந்தநிலையில் பக்கத்து வீட்டுக்காரர் சந்திரனுக்கும் சதீஷுக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுவரும் இந்தநிலையில் கிருஷ்ணவேனி தன் வீட்டின் வாசலில் உட்கார்ந்து தலை வாரிக்கொண்டுஇருந்தார். பக்கத்து வீட்டுக்காரர் சந்திரன் வெளியே கிளம்பியுள்ளார். அப்போது கிருஷ்ணவேனியை பார்த்து அபசகுணம் நான் முக்கியமான வேலையாக செல்லும் போதுதான் தலைவாருவிய என்று சத்தம் போட்டுள்ளார்.

இதனையடுத்து கிருஷ்ணவேனி நான் எங்கள் வீட்டில் இருந்து தலைவாரினால் உங்களுக்கு என்ன என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது ஒருகட்டத்தில் சந்திரன் கிருஷ்ணவேனியை அடித்து உதைத்து வீட்டின் வெளியே கிழுத்து சென்றுவிட்டார். பின் கிருஷ்ணவேனி நடந்த விவரத்தை தன் கணவருக்கு போன் செய்து அழுத்துள்ளார். கணவன் வருவதற்குள் அவமானத்தில் கிருஷ்ணவேனி வீற்றுக்கு சென்று தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து சம்பவஇடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திரனை கைதுசெய்துள்ளனர்.