அழகா இருந்த ஆபத்துதான் ? போதையில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய பிரசாந்த் !….

சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேளச்சேரி ஷாப்பிங் மாலுக்கு வந்திருக்கிறார் . தேவையான பொருட்களை வாங்கிவிட்டு திரும்பவும் டூவீலர் எடுத்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் இந்த இளம்பெண்ணை பார்த்துவிட்டார். அவர் மிகவும் அழகா இருந்தார் அதனால் இவரும் பைக்கை எடுத்து கொண்டு பின்னாடியே சென்றுள்ளார். அந்த பெண் தன் வீடு வரை சென்றபிறகுதான், இந்த நபர் பின்னாடியே வந்தது தெரிந்தது. என்ன விவரம் என்று கேட்கவும், நான் டெலிவரி பாய் “நீங்க ஆன்லைனில் ஃபுட் ஆர்டர் பண்ணீங்க.. அதை தர்றதுக்குத்தான் வந்தேன்” என்று சொல்லி ஒரு பார்சலை நீட்டி உள்ளார்.

அந்த பெண்ணோ, இவர் நடவடிக்கை சரி இல்லாதவர் போல் தோன்றியதால் அவரிடம் “நான் எந்த சாப்பாட்டையும் ஆர்டர் பண்ணல.. வெளியே போங்க” என்று சொல்லி உள்ளார். அதற்கு மேல் சும்மா இல்லாத அந்த நபர் அந்த அழகான பெண்ணிடம் நெருங்கி சென்று தவறாக நடக்க முயன்றுள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பாராத அந்த இளம் பெண், கூச்சல் போடவும், ரோட்டில் போய் கொண்டிருந்தவர்கள் ஓடிவந்தனர். ஆனால், அந்த நபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். பதற்றமாகவும், அதிர்ச்சியில் இருந்தும் மீளமுடியாதஅந்த இளம் பெண், மடிப்பாக்கம் போலீசில் புகார் தந்தார். அப்போதுதான், போலீசார், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதன்படி, பெண்ணை துரத்தி கொண்டு வந்தவர் பிரசாந்த் என்பது, வயது 32 என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, பிரசாந்தை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, “நான் ஷாப்பிங் காம்ப்ளக்சில் சும்மாதான் நின்னுட்டு இருந்தேன்.. இந்த பொண்ணு அங்க வந்து டூவீலர் எடுத்து கிளம்பினாங்க. ஆனா ரொம்ப அழகா இருந்தாங்க.. எனக்கு பிடிச்சுபோச்சு.. நான் வேற கொஞ்சம் போதையில இருந்தேன்.. அதான் பின்னாடியே போய்ட்டேன்.என்னையே மறந்துட்டேன்.. அந்த அழகை பார்த்து 5 கிமீ தூரம் போய்ட்டேன்.. பேசணும்னு ஆசையா இருந்ததால்தான், அப்படி செய்தேன்” என்று வாக்குமூலம் தந்தார். நான் போதையில் இப்படி அந்த அழகான பெண்கிட்ட இப்படி தவற நடந்துகிடத்துக்கு சாரி என்னை மன்னிச்சிடுங்கனு கூறியுள்ளான் .