புல்புல் புயலினால் மீனவர்கள் மீன் பிடிக்க தடை உத்தரவு ! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் ……

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அண்மையில் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான மஹா புயல் குஜராத்தில் கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரிதாக மழையில்லை. இதனிடையே அந்தமான் கடல் பகுதியில் நேற்று முன் தினம் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.இந்நிலையில் வங்கக் கடலில் புல்புல் புயல் இன்று உருவாகி இருக்கிறது.


இந்த புயல் சென்னை வானிலை மையம் நேற்று கூறியபடி வடமேற்கு மற்றும் வடக்கு ஒடிஸா பகுதியை நோக்கி நகரும். இந்த புல்புல் புயல் காரணமாக அந்தமான் கடல் பகுதியில் யாரும் மீன் பிடிக்க வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை, மற்றும் வானம் மேகமூட்டமுடம் காணப்படும் என்று வானில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே 7-ஆம் தேதி வரை மத்திய தென் கிழக்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திர கடல் பகுதிகளில் காற்று பலமாக வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே புல்புல் புயல் ஒடிசாவை நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக ஒடிசா மாநிலத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அகில இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது .