நொடிப்பொழுதில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள் ? காரின் மீது காட்டுயானை ஏறி அமர்ந்த நிகழ்வு !….

தாய்லாந்தில் உள்ள தேசிய பூங்காவில் சுற்றுலா பயணிகள் சென்ற காரை காட்டில் சுற்றித்திரிந்த யானை வழிமறித்தது. இதனால் காரை நிறுத்திய சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் யானையின் செய்கைகளை பார்த்து கொண்டிருந்தனர். அப்பொழுது பின்னாலே வந்த காரில் உள்ள சுற்றுலா பயணிகள் அந்த காட்டு யானையின் செய்கையை மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர் . அந்த நிகழ்வு பரபரப்புக்குள்ளானது .

முதலில் யானை தும்பிக்கையால் காரின் முன்பக்கத்தை தட்டியது. அப்படியே தனது இரண்டு முன்கால்களை எடுத்து காரை மிதித்தது. பின்பு தனது இரண்டு முன்கால்களையும் அப்படியே காரின் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு யானை கொண்டு சென்று அப்படியே காரின் மீது உட்கார ஆரம்பித்துள்ளது.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட கார் ஓட்டுனர் காரை மெதுவாக நகர்த்த ஆரம்பித்து, பின்பு வேகமாக காரை ஓட்டி எஸ்கேப் ஆகியுள்ளார்.நூலிழையில் யானிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள். தாய்லாந்தில் உள்ள தேசிய பூங்காவில் யானையிடமிருந்த நொடிப்பொழுதில் சுற்றுலா பயணிகள் தப்பித்த காணொளி காட்சி வைரலாகி வருகின்றது.