வருமானவரித்துறை அறிவிப்பு ,ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெறும் வசதி ! விரைவில் அறிமுகம்.. எப்படி பெறுவது என்ற விவரம்.

ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு பெறும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று டெல்லியில் வருமான வரித்துறை விரைவில்அறிமுகம் செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய பான் கார்டை இரண்டு நாளில் வாங்கிவிட முடியும். ஆனால் ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் தொலைந்து போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ புதிதாக மாற்று பான் கார்டை பெற்றுக்கொள்ள 20 நாட்கள் ஆகுகிறது. இ பான் கார்டு இதன்படி ஏற்கனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள் தொலைந்து போனாலோ அல்லது சேதம் அடைந்தாலோ எலெக்ட்ரானிக் பான் கார்டு (இ-பான்) எந்தவித கட்டணமும் இல்லாமல் விண்ணப்பதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

பாஸ்வேர்டு ஆதார் கார்டு அடிப்படையில் பான் கார்டு வழங்கப்பட உள்ளது. ஆதார் கார்டில் உள்ள விவரங்களை சரிபார்த்த பிறகு, வருமான வரித்துறையில் இருந்து விண்ணப்பதாரரின் மொபைல் எண்ணுக்கு ஒரு முறை பாஸ்வேர்டு அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பதாரர் தனது பான் கார்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் புதிய இ-பான் கார்டை இருந்த இடத்தில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்.ஆதாரில் உள்ள புகைப்படம், பெயர், தந்தை பெயர், முகவரி விவரங்கள் மட்டுமே உங்களது புதிய பான் கார்டிலும் இடம்பெறும்.ஆன்லைனில் ஆதாரில் உள்ள விவரங்கள் தவிர மற்ற விவரங்களை மட்டுமே விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதன்படி சுமார் 62,000 இ-பான் கார்டுகள் 8 நாட்களில் வழங்கப்பட்டது.
அதிகாரிகள் தகவல் இந்த திட்டத்தில் குறைபாடு உள்ளதா என ஆய்வு செய்து வருகிறார்கள். அடுத்த சில வாரங்களில் உடனடியாக பான் கார்டு பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை வருமான வரித்துறை அதிகாரிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். .