இரண்டு நாட்களாக 40 அடி ஆழம்..! 60 வயது பாட்டி அனுபவித்த கொடுமை..?

சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுக்காவில் உள்ள கிராமம் தான் கூடமலை அந்த கிராமத்தில் சுமார் 6- வயதுடைய வெள்ளியம்மாள் என்ற பாட்டி வாழ்ந்துவருகிறார். சிலவருடங்களுக்கு முன் அவரின் கணவர் உடல்நிலை பத்திப்பால் இறந்த நிலையில் வெள்ளியம்மாள் மட்டும் தனிமையில் வாழ்ந்துவருகிறார்.

தீடிர் என்று அந்த பாட்டி வெள்ளியம்மாளை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை அக்கம் பக்கத்தினர் இரண்டு நாட்களாக தேடியும் அந்த பாட்டி கிடைக்கவில்லை. இந்தநிலையில் அந்த ஊரை சார்ந்த ஆடு மேய்ப்பவர் கிராம நிர்வாக அலுவலருக்கு போன் செய்து ஊருக்கு வெளியே இருக்கும் பாழடைந்த கிணற்றில் யாரோ அழுதுகொண்டுஇருக்கிறார்கள் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவிடத்திற்கு விரைந்து வந்து பார்த்தல் கடந்த இரண்டு நாட்களாக தேடப்பட்டு வந்த வெள்ளியம்மாள் தான் கிணற்றுக்குள் தவித்து வந்துள்ளார். அதைத்தொடர்ந்து பாட்டியை பத்திரமாக மீட்டெடுத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பேசிய காவல்துறணையினர். தனிமையில் வாழ்ந்த வெள்ளியம்மாள் அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.40-அடி ஆழம் உள்ள கிணற்றில் தான் வீழ்ந்தது கூட தெரியாமல் இரண்டு நாட்கள் இருந்துள்ளார்.