5 பேர்கொண்ட மருமநபர்களால் கொலைசெய்யபட்ட ரவுடி பாண்டியன் ! புதுச்சேரியில் பரபரப்பு ……..

ரவுடி பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது புதுச்சேரியில். புதுச்சேரியை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாண்டியன். பல்வேறு கொலை மற்றும் கொள்ளைகளை செய்த பாண்டியனை போலீசார் தேடி வந்தனர். புதுச்சேரி போலீஸ் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா போலீசும் இவரை தேடி வந்தது. கடந்த ஒரு வருடமாக இவர் தலை மறைவாக இருந்தார். அதேபோல் முன் பகை காரணமாக புதுச்சேரியில் வேறு சில ரவுடி குழுக்களும் பாண்டியனை தேடி வந்தது. இந்த நிலையில்தான் புதுச்சேரியில் மாலை நேரத்தில் ரவுடி பாண்டியன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தனியாக நடந்து செல்லும் போது இந்த கொலை பாண்டியனை பின் தொடர்ந்து வந்த 5 பேர், அவரை சுற்றி வளைத்து, அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். சரமாரியாக அரிவாளால் வெட்டி அங்கிருந்து பைக்கில் தப்பித்து சென்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தால் பாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து இருக்கிறார்கள். அந்த பகுதியில் இருக்கும் கடைகளில் சில முக்கிய வாக்கு மூலங்களை போலீசார் வாங்கி இருக்கிறார்கள்.

அதேபோல் அங்கு ஏதாவது சிசிடிவி கேமரா கிடைக்கிறதா என்றும் சோதனை செய்து வருகிறார்கள். இந்த கொலை, முன்பகை காரணமாக நடந்து இருக்கலாம். வேறு ஏதாவது ஒரு ரவுடி கும்பல் பாண்டியனை கொன்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சமீபகாலமாக புதுச்சேரியில் பல ரௌடிகள் இது போலவே கொலைசெய்ப்பட்டு வருகிறார்கள் என கூறப்படுகின்றது .