காதலனின் காமவெறிக்காக இளம் பெண்களை விபச்சாரம் செய்ய வைத்த ஆசிரியை ? சென்னையில் பரபரப்பு ! ….

சென்னையைச் சேர்ந்தவர் சஞ்சனா, சஞ்சனாவும், அப்பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். சஞ்சனா 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தன் இல்லத்தில் வைத்து டியூசன் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், திடிரென்று, சஞ்சனாவுடன் பேசுவதை நிறுத்திக்கொண்ட பாலாஜி, அவரை வெறுத்து ஒதுக்கியுள்ளார். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சஞ்சனா பாலாஜியிடம், நீ என்னிடம் பேச வேண்டுமென்றால் நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்க, உடனே பாலாஜி உன்னிடம் டியூசன் படிக்கும் மாணவிகளை என்னிடம் தினமும் ஒரு பெண்களை அனுப்பிவைக்க வேண்டும் நான் அவர்களிடம் என்காமவெறியை தீர்த்துக்கொண்டு அதை வீடியோவும் எடுத்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவேன் அப்பொழுதுதான் அவர்கள் யாரிடமும் இந்த ரகசியத்தை சொல்லமாட்டார்கள் என்று கூறினான் , அதற்கு சற்றம் இரக்கமில்லாமல் கேட்ட பாலாஜிடம் , சஞ்சனாவும் சரி என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தம்மிடம் டியூசன் படித்த மாணவி ஒருவரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு சொகுசு விடுதிக்கு சஞ்சனா அழைத்துச் சென்றதாக தெரிகிறது. அவர்களுடன் பாலாஜியும் சென்றுள்ளார். அங்கு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பாலாஜி, அதை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சஞ்சனாவிடம் பயிலும் சில மாணவிகளை அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இதுகுறித்து தன் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், உடனடியாக பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட பொலிசார், சஞ்சனாவையும் பாலாஜியையும் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காதலனுக்காக இந்த தவறான செயலை சஞ்சனா செய்துள்ளார் . தன்னிடம் டியூசன் படிக்க வந்த மாணவிகளை தன் காதலன் காமவெறிக்கு துணைபுரிந்துள்ளார்.