லஞ்சம் கேட்ட இதுதான் நடக்கும் !!..லஞ்சம் கேட்ட தாசில்தாரை தீ வைத்து கொளுத்திய ஏழை விவசாயி ? தெலுங்கானாவில் நடந்த கொடூர சம்பவம் !

அறையை பூட்டி விட்டு தீ வைத்த விவசாயி சுரேஷ், தப்பிக்க கூட வழியில்லாமல் எரிந்து போன தாசில்தார் விஜயா ரெட்டி. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மெட் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெண் தாசில்தார் விஜயா ரெட்டி என்பவரை உயிரோடு தீவைத்து எரித்து விட்டார் சுரேஷ் என்ற விவசாயி. நில ஆவணத்தில் இருந்த தவறை சரி செய்யாமல் தாலுகா அலுவலகம் தாமதம் செய்ததே அவரது கோபத்துக்குக் காரணமாக என்கிறாரகள் .


இதுகுறித்து ஊழியர்கள் சிலர் கூறுகையில், சம்பவத்தில் ஈடுபட்ட நபர் உள்ளே போன சில நிமிடங்களில் மேடத்தின் கதறல் சத்தம் கேட்டது. அறைக்குள்ளிருந்து புகையும் வந்தது. இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். ஆனால் மேடத்தின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து மேடத்தின் டிரைவரும், மனு கொடுக்க வந்திருந்த ஒருவரும் சேர்ந்து அறையை உடைத்து திறந்து உள்ளே பாய்ந்தனர். அங்கு மேடம் முழுமையாக தீயில் எரிந்து கொண்டிருந்தார். அவர் மீது தீவைத்த நபரும் தீயில் சிக்கியிருந்தார். பதறிப் போன நாங்கள் தீயை அணைக்க எவ்வளவோ முயற்சித்தோம்.மேடம் உடலில் பற்றிய தீயோடு வெளியே ஓடி வந்தார். அதற்கு மேல் அவரால் ஓட முடியவில்லை. அப்படியே கீழே விழுந்து கருகி விட்டார். தீயை அணைக்க அவர் மீது நாங்கள் துணியை போட்டோம். ஆனால் பலன் இல்லை என்றனர்.


இந்த தாலுக்கா புதிதாக உருவாக்கப்பட்டதாம். அதன் முதல் தாசில்தாரே விஜயா ரெட்டிதானாம். கடந்த நான்கு வருடமாக இங்கு அவர் பணியாற்றி வந்தாராம். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் மக்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். அந்தப் பகுதியே கொந்தளிப்பாக காணப்பட்டது. போலீஸ் சரியான பாதுகாப்பு தரவில்லை என்பதால்தான் அரசுழியருகே இந்த நிலைமை ஏற்பட்டது என பொதுமக்கள் போலீசார் மீது கண்டனம் தெரிவித்தனர்.