11 மாத குழந்தையின் தலையில் விழுந்த டிவி..! தாயின் கண்முன் நிகழ்ந்த பயங்கரம்! நடுவீட்டில் துயரம்!

ஆந்திராவில் உள்ள சிறீகாகுளம் மாவட்டத்தை, அடுத்த காசிபுகா நகரில் இருக்கும் புது காலணியில் வசித்து வருபவர் வரலட்சுமி. சம்பவத்தன்று வரலட்சுமியின் கணவர் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட அம்மா மற்றும் இவரது 11 மாத பெண் குழந்தை மோகாரினி வீட்டில் இருந்தார்கள்.

நேற்று முன்தினம் ஆதாவது.( புதன் கிழமை ) வரலக்ஷ்மி சமைத்து கொண்டிருந்த போது அவரின் குழந்தை வீட்டினுள் விளையாடிவிரிந்தார் அப்போது டிவியின் ஒயரை பிடித்து இழுத்து கொண்டு விளையாடினாள் எதிர்பாராதவிதமாக டிவி குழந்தையின் மேல விழுந்துள்ளது.

பெருமளவில் சத்தம் கேட்டதால் சமையலறையில் இருந்து ஓடிவந்து பார்த்த வரலக்ஷ்மி பதறி அடித்து கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சிகிச்சை செய்த மருத்துவர்கள். பின் சில நிமிடங்களில் அக்குழந்தை இறந்துவிட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.