டிக் டாக் பண்ண மனைவியை கட்டையால் மண்டையை உடைத்து கொன்ற கணவன் !…….

டிக்டொக் செயலியே கதி என இருந்த மனைவியை கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, தெலுங்கானா மாநிலத்தில் . தையல் வேலை செய்து வருபவர் பாசகாசிம், இவர் கடந்த 14 வருடத்திற்கு முன்பு ஃபாத்திமா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், திருமணம் ஆனதிலிருந்தே மனைவி அதிக செலவு செய்வதாக சண்டையிட்டு வந்துள்ளார் பாசகாசிம்.

இதுமட்டுமின்றி , கடந்த 2 மாதத்திற்கு முன்னர் ஊராட்சி அலுவலகம் ஒன்றில் பாத்திமாவுக்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் வேலை கிடைத்துள்ளது. அங்கு வேலையை ஒழுங்காக செய்யாமல் தனது மொபைலில் டிக் டாக் பயன்படுத்துவதிலேயே ஆர்வம் காட்டி வந்துள்ளார். குடும்பத்தை ஒழுங்காக கவனிக்காமல் டிக் டாக்கில் வீடியோ போடுவதையே வேலையாக வைத்திருந்த பாத்திமா மீது கோபம் அடைந்தார் கணவர் பாசகாசிம்.

 

 

 

 

 

 

 

 

இது குறித்து கடந்த 27ம் தேதி மனைவியுடன் சண்டை போட்டுள்ளார் சண்டை முற்றி வாக்குவாதம் ஆரம்பித்தது அதில் கணவர் பாசகாசிம் மனைவி பாத்திமா மீது சப்பாத்தி கட்டையால் மண்டையை உடைத்துள்ளார். இதனால், பாத்திமா சம்பவ இடத்திலேயே இறந்துவிட, அவர் தற்கொலை செய்து கொண்டது போல நாடகம் ஆடியுள்ளார். ஆனால் போலீஸ் நடத்திய தீவிர விசாரணையில் பாத்திமாவை கணவர் தான் கொன்றுள்ளார் என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.