தன்குடும்பத்தை கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட கணவர் ! பின்னணி என்ன ? குலநடுங்கவைக்கும் கொடூர சம்பவம்…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டுநாள் முன்பு இரவு 9.18 மணியளவில், நபர் ஒருவர் தமது சகோதரியின் அலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும், ஒருமுறை அவரது குடியிருப்புக்கு சென்று பார்வையிட்டு தகவல் தெரிவிக்க முடியுமா என பொலிசாரிடம் கோரியுள்ளார். அமெரிக்காவில் இது வாடிக்கை நிகழ்வு என்பதால், அப்பகுதியில் உள்ள ரோந்து பொலிசாரை குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். ரோந்து பொலிசாரால் அந்த குலை நடுங்க வைக்கும் சம்பவம் கண்டுபிடிக்கபட்டது.

அந்த குடியிருப்பின் படுக்கை அறையில் 46 வயதான யோனதன் டெட்லா, அவரது மனைவி ஜெனிபர் ஸ்க்லெக்ட்(42) மற்றும் அவர்களது ஐந்து வயது மகள் அபேனேஷ் ஸ்க்லெட்ச் டெட்லா ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். யோனதன் ஜெனிபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், ஏன் ஜெனிபர் விவாகரத்து கோரினார் என்பதும், பாதுகாப்பு கோரி ஏன் புகார் அளித்தார் என்பது விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

விவாகரத்து தொடர்பில் யோனதன் தமது மனைவியை மிரட்டி வந்ததும், அது நடந்தால் அனைவரையும் கொன்றுவிட்டு, தாம் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது. ஆதலால் மனைவி விவாகரத்து கேட்டதால் மனைவியையும் மகனையும் அவர் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பது தற்போதைய நிலை, ஆனால் விஷணைக்கு பின்புதான் தெரியவரும் உண்மை என்ன என்பது.