தன் தாய் மற்றும் சகோதரியின் பிணங்களுடன் 2 மாதமாக ஒரே வீட்டில் தங்கியுள்ள தீபா ? பின்னணி என்ன – அதிர்ச்சியில் ஊர்மக்கள் !…

இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்யாவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலிசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது உள்ளே இரண்டு பெண்களின் சடலங்கள் அழுகிய நிலையில் இருந்ததும் அதன் அருகில் பெண்ணொருவர் தூங்கி கொண்டிருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து இரண்டு சடலங்களையும் மீட்ட போலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள். இது குறித்த விசாரணையில், உயிரிழந்த பெண்கள் புஷ்பா ஸ்ரீவஸ்தவா மற்றும் அவர் மகள் விபா என தெரியவந்தது. புஷ்பாவின் கணவர் கடந்த 1990ஆம் ஆண்டு உயிரிழந்தார். இதன் பின்னர் அவர் தனது மகள்களான விபா, ரூபா மற்றும் தீபாவுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூபா உயிரிழந்தார். இதையடுத்து புஷ்பா, விபா, தீபா ஆகிய மூவருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டது.இந்த சூழலில் புஷ்பாவும், விபாவும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்தனர். அதனை உணராத தீபா அவர்கள் சடலத்துடன் வசித்து வந்தது தெரியவந்துள்ளது. தற்போது தீபாவை போலிசார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வரும் நிலையில் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே புஷ்பா, விபாவின் மரணத்துக்கான காரணம் வெளிவரும் என தெரியவந்துள்ளது.