இசையை கேட்டு மயங்கிய பிரபல பாடகி ?வீடியோ பதிவு செய்து தான் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ! கேட்டு ரசித்த ரசிகரகள் ….

தன் அம்மாவை போலவே தனித்துவமான குரலில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பாடி அசத்தி வருகிறார் ஸ்வேதா மோகன் .பிரபல பாடகி சுஜாதாவின் மகள் ஸ்வேதா மோகன். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்திரா, பாம்பே படத்தில் தன் சினிமா பயணத்தை தமிழில் தொடங்கினார். பின் கார்த்தி ராஜா, யுவன், தரண், ஜோசுவா, வித்யா சாகார், இளையராகா, சிற்பி, ஹாரிஸ், அனிருத் என பலரின் இசையில் பாடியுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் சங்கத்தமிழன் படத்திலும் அவர் பாடியுள்ளார். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் ஸ்வேதா மோகன், மற்றும் சரிகமபா நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார் பிரபல பாடகி சுஜாதா. தாயும் மகளும் பிறமொழிகளில் பின்னணி பாடல்களை பாடி ரசிகரகள் மனதில் நீங்காத இடம்பிடித்தவர்கள்.

ரஹ்மானின் இசையில் பிரபு தேவா, நக்மா நடித்த காதலன் படத்தில் மனோ, சுவர்ணலதா பாடிய மாஸான பாடலான முக்காலா முக்கபலா பாடலை கேரள பாரம்பரிய செண்டை மேளமும், பேண்ட் வாத்தியம் இசை குழுவினர் சேர்ந்து வாசிக்க அற்புதமாக இருக்கும் வீடியோ வெளியிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்வேதா மோகன்.