4 -கொள்ளையர்களை தனியாக விரட்டிச் சென்று பிடித்த பெண் அதிகாரி! வைரலாகும் வீடியோ காட்சிக்கு !….. பரபரப்பு தகவல் …..

வேல்ஸ் நாட்டில் காரில் தப்பிச்சென்ற நான்கு கொள்ளையர்களை, பெண் அதிகாரி தனியாக பெண்போலீசர் விரட்டிச்சென்று பிடித்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. நார்த்ஹோப் ஹால் சாலையில் Birrell காரில் தனியாகச் சென்றுக்கொண்டிருந்த போது, ஆடி காரில் முகமூடி அணிந்த நான்கு கொள்ளையர்களை கண்டுள்ளார்.  போலீஸ் அதிகாரி பின்னால் விரட்டுவதை அறிந்த கொள்ளையர்கள், வேகமாக சென்றுள்ளனர்.

இதனிடையே, திடீரென சாலையின் நடுவில் காரை நிறுத்திய கொள்ளையர்கள், முகமூடி அணிந்தபடி காரில் இருந்து இறங்கி பின்னால் துரத்தி வந்த Birrell கார் மீது கற்களால் தாக்கியுள்ளனர். Birrell-ன் கார் கண்ணாடி உடைந்துள்ளது.பின்னர் மீண்டும் காரில் ஏறிய கொள்ளையர்கள் வேகமாக சென்றுள்ளனர். எனினும், துணிவுடன் Birrell விடாமல் விரட்டிச்சென்றுள்ளார். கொள்ளையர்கள் சென்ற காரின் சக்கரம் ஒன்று கழன்று சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும், காரை பின்புறமாக இயக்கிய கொள்ளையர்கள், Birrell காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதில், காயமடைந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு Birrell சிகிச்சைக்கு பின் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.ஏப்ரல் 2ம்தேதி அன்று நடந்த சம்பவத்தின் போது தனது பணியை சிறப்பாக செய்த பெண் காவலர் Birrell-லை உயர் அதிகாரி பாராட்டியுள்ளார். காரில் பயணித்த நான்கு கொள்ளையர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.