ஓடும் ரயிலில் காமத்தொல்லை கொடுத்த இளைஞரை புரட்டிப்போட்டு அடித்து போலீசாரிடம் ஒப்படைத்த வீரஇளம்பெண் ! பாராட்டுக்கள் குவிந்தன !….

கொச்சுவேலி – மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் கடந்த 5 ஆம் தேதியன்று , சேலம் – திருப்பத்துர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 5 மணியளவில்அந்த பெண் தூங்கிகொண்டுஇருக்கும் பொழுது அவரை பார்த்த ஒரு வாலிபர் ஒருவர் அவரை பார்த்து அவரின் மேல் காமஆசை கொண்டு அவர் அருகில் சென்று அவர்மேல் கைவைத்து இருக்கிறார் , பாலியல் ரீதியாக உடல்பாகங்களில் கைவைத்து அழுத்திவிட்டு ஓடியதாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ந்துபோன பெண், உடனடியாக அந்த இளைஞரை துரத்தி பிடித்து சரமாரியாக தாக்கியதோடு, எர்ணாகுளம் ரயில்நிலையத்தில் ரயில்வே போலிசாரிடம் ஒப்படைத்துள்ளார். போலிசார் அந்த இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவரது பெயர் சுனிஷ் (32 வயது) என தெரியவந்துள்ளது.

மேலும், வழக்குப் பதிந்த எர்ணாகுளம் ரயில்வே போலீசார், இந்த வழக்கை பெங்களூருவுக்கு இடமாற்றம் செய்ததையடுத்து, ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விரைவில் விசாரணை தொடங்கப்படும் என கூறியுள்ளனர்.தனி ஒரு பெண்ணாக அவரது இந்த துணிச்சலான செய்யலை கண்டு போலீசார் மற்றும் பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் .