ஒரு வீர சகாப்தம் உருவாக உள்ளது ! ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கும் ‘தலைவி’ படம் ஆரம்பம்!….

நாம் அனைவராலும் மறக்கமுடியாத ஒரு மாபெறும் வீர மங்கை யார் என்று கேட்டால் நம் மனதில் நினைவுக்கு வருவது மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜே. ஜெயலலிதா அவர்கள் தான். அவர்கள் திரையுலகில் கொடிகட்டி பறந்ததை விட நம் தாய் நாட்டிற்காகத்தான் அதிக பாடுபட்டார் அவரின் சகாப்தம் இவ்வுலகில் வேறு யாராலும் செய்யமுடியாத ஒன்றாகும் . அவரது வாழ்க்கையை வரலாற்றை திரை படமாக எடுப்பது என்பது ஒருமுறை நமக்கு அவரின் நியாபகங்கள் நினைவுக்கு வருவது மட்டும் அல்ல அவரைப்பற்றி நாம் அறிந்ததை நம் நிகழ்கால பயிர்களுக்கு ஒரு வீர சகாப்தம் எடுத்துவுரைக்கும் ஒரு அற்புத காவியம்க் ஆகும்.


ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் ‘தலைவி’ திரைப்படத்திற்காக படபிடிப்பு நேற்று தொடங்கியது.தமிழில் கடந்த 2008ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.

விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘பகுபலி’, ‘மணிகர்னிகா’ உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார்.