பிரபல காமெடி நடிகை மைனா என்கிற நந்தினிக்கு இரண்டாம் திருமணம் நடந்தது இன்று!….. சோஷியல் மீடியாக்களில் வாழ்த்துக்கள் குவிந்துவருகின்றது….

பிரபல சீரியல் காமெடி நடிகை மைனா என்கிற நந்தினிக்கு இன்று இரண்டாம் திருமணம் நடைபெற்றது , ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகி ரக்ஷிதாவிற்கு தோழியாக நடித்து கலக்கியவர் தான் மைனா நந்தினி. இவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல கஷ்டங்களைக் கடந்துவந்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஜிம் மாஸ்டர் கார்த்திகேயன் என்பவருடன் திருமணமாகி கருத்துவேறுபாடு காரணமாக திடீரென்று கார்த்திகேயன் கடந்த 2017ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அத்தருணத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி தற்போது அதிலிருந்து விடுபட்டு வந்த மைனா நந்தினி யோகேஷ் என்பவரை காதலித்து வந்தார்.

யோகேஸ்வரன் என்பவர் பல சீரியல்களில் ஹீரோவின் தோழனாக நடித்து வந்துள்ளார் அவர் ஒரு இயக்குனரும் ஆவர், இந்நிலையில், தற்போது மைனாவும், யோகேஷும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களது நிச்சயதார்த்த புகைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.