சூப்பர் சிங்கர் சீசன் 7 முதலிடம் பிடித்து ‘மூக்குத்தி முருகன்’ வெற்றி..! வாழ்த்துக்கள் குவிந்தவருகிறது.. “ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய” சம்பவம்..?

விஜய் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று நடைப்பெற்றது.
இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றவர்கள் சாம் நிஷாந்த், புண்யா, மூக்குத்தி முருகன், விக்ரம் மற்றும் கௌதம் ஆகிய ஐந்து பேர் தகுதிப் பெற்றனர். இசை அமைப்பாளர் அனிருத் இந்த இறுதிக்கட்ட நிகழ்ச்சியில் நடுவராக பொறுப்பேற்றார். விஜய் டிவி சீரியல் அக்டர்ஸ் , பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் என பல்வேறுபட்ட செலிபிரிட்டிஸ் இதில் பாடல்கள் படியும் நடனமாடியும் ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தினர்.

இந்த இறுதி கட்ட நிகழ்சியானது கோவையில் நடைபெற்றது. இப்போட்டியில் மூன்றாவது இடத்தை சாம் நிஷாந்த் மற்றும் புண்யா இருவரும் பெற்றனர். இரண்டாமிடத்தை விக்ரம் பெற்றார். மூக்குத்தி முருகன் முதலிடத்தைப் பெற்று சூப்பர் சிங்கர் சீசன் 7 வின்னர் பட்டத்தை வென்றார்.

வெற்றிபெற்ற முருகனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருவதுடன், இலங்கை பெண் புண்யா வெற்றிபெருவார் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு இது கடும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கௌதமின் ரசிகர்கள் அவருக்கு எந்த பரிசும் பெற்றது போன்ற பதிவுகள் இல்லாத காரணத்தினால் அவரது ரசிகரகள் சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.