தேசிய அளவில் வெற்றிபெற்ற நடிகரின் மகன் ? இன்ஸ்ட்ராகிராமில் பரவலாகும் விஷயம் !…….

பிரபல நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் , தந்தைக்கு படவாய்ப்புகள் இன்னும் அதிகஅளவில் கிடைத்து வருகிறது அவர் திரைவுலகில் இன்னும் புகழ்பெற்று கொண்டிருக்கிறார் ஆனால் மகன் சிபிராஜுக்கு திரைவுலகில் அவ்வளவு தந்தைக்கு கிடைத்த படவாய்ப்பு கிட்டவில்லை .நடிகர் சிபிராஜ் அவரின் ட்விட்டர் பக்கத்தில் தனது மகன் குறித்து பதிவிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கின்றாரா என்றும் மகனின் திறமைகளை பாராட்டியும் வருகின்றனர்.

சிபிராஜின் மகன் தீரன் கடந்த 9 ,10ம் தேதிகளில் புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வோண்டா போட்டியில் கலந்து கொண்டு உள்ளார்.டேக்வோண்டா என்பது கொரியா நாட்டின் தற்காப்புக் கலை ஆகும். மேலும், அங்கு நடந்த போட்டிகளில் வென்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று உள்ளார். இதனால் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையாகவும் உள்ளது எனவும் அவர் கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.

மேலும், இது குறித்து பல பிரபலங்களும்,நெட்டிசன்களும் நடிகர் சிபிராஜுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது அப்படியே சிபிராஜ் போல உள்ளது எனவும் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால் சிபிராஜை பார்த்த ரசிகர்கள் தான் இது சிபிதானா என்று அதிர்ச்சியில் உள்ளனர்.