பிரபல நடிகருக்குள் மோதல் ஆரம்பமாகுமா ? அதிர்ச்சியில் ரசிகர்கள் !…….

உலகபுகழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் திரைவுலகத்தினர் . அந்த படத்திற்கு போட்டியாக தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தை களமிறக்குகிறது சத்யஜோதி நிறுவனம்.

சென்ற வருடம் பேட்ட படத்திற்கு எதிராக விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்ததும் இதே நிறுவனம்தான். விஸ்வாசம் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த வருடமும் ரஜினி படத்துடன் மோதுகின்றனர். பொங்கலுக்கு தொடர்ந்து 7 நாள் விடுமுறை என்பதால் இந்த முடிவை தைரியமாக எடுத்துள்ளனர் என தெரிகிறது.

ரசிகர்கள் இடையில் இந்த இரண்டு படங்களில் எது வசூலை அள்ளிச்செல்லும் என்னும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது . திரையுலக நிறுவனங்கள் தொடர்ந்து இரண்டு வருடமாக இந்தமாதிரி ஒரு முடிவு எடுப்பதால் ரசிகர்கள் இடையில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது .