தாலிகட்ட அரைமணி நேரம் முன்பு தூக்குபோட்டு கொண்ட மாப்பிள்ளை ? பரிதாபத்தில் மணமகள் ! அதிர்ச்சியில் ஆழ்ந்த உறவினர்கள் …..

ஹைதராபாத் மலக்பேட் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது திருமணம் நடக்க ஒருமணிநேரக்த்திற்கு முன்பு மனமாப்பிள்ளை தூக்குபோட்டு இறந்துவிட்டார். திருமணம் என்றால் இணையும் இருவர் மட்டுமல்ல இரு குடும்பத்து உறவுகளுக்கும் பெரும் மகிழ்ச்சியே. ஆனால் சில எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுவது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. அது போல ஹைதராபாத் மலக்பேட் பகுதியை சேர்ந்தவர் சந்தீப். 24 வயதாகும் இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிகிறார்.


அவருக்கும் உறவுக்கார பெண்ணுக்கும் நேற்று நவம்பர் 10 காலை 11 மணியளவில் திருமணம் நடைபெற இருந்தது. முதல் நாள் இரவு நிச்சயதார்த்த முடிந்து வெகு நேரம் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் இரவு 1 மணிக்கு மணமகன் அறையில் தூங்க சென்றாராம். காலையில் வெகு நேரமாகியும் அவர் எழுந்திருக்காமல் இருந்த அவரை எழுப்ப சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை தட்டியும் சந்தீப் திறக்கவில்லை.

இதனால் கதவை உடைத்து பார்த்தபோது அவர் பேனில் தூக்கு மாட்டியபிடி பிணமாக தொங்கியுள்ளார். இதனால் போலிசார் தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர். சந்தீப்பின் அம்மா முன்பே பல வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். அப்பா மட்டுமே இருக்கிறாராம்.அதே வேளையில் தாத்தாவின் வளர்ப்பில் இருந்த சந்தீப் அண்மையில் தன் தாத்தா இறந்ததிலிருந்தே மிகுந்த சோகத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மனமாப்பிள்ளை எதற்காக இந்த முடிவுக்கு வந்தார் என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது . போலீசார் இதற்கான விசாரணையை தீவிரமாக செய்துகொண்டு வருகின்றனர் . விசாரணை முடிந்ததுக்கு பின்பே என்ன கரணம் என்று தெரியவரும்.