‘நொடிப்பொழுதில் இளம் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்’ ! மனதை உருக்கும் விபத்து திருமணத்திற்குச் சென்றுவிட்டு திரும்பும் வழியில்…..

கேரள மாநிலம் நெய்யாற்றின்கரா பகுதியைச் சேர்ந்த தம்பதி ராகுல் (28), சௌமியா (24). இவர்களுக்கு இஷானி என்ற 2 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சற்று சரில்லாத காரணத்தினால் குழந்தையை தன் பெற்றோரிடத்தில் விட்டுச்செல்ல முடிவு செய்து. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை தங்கள் குழந்தையை பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு ராகுலும், சௌமியாவும் திருவனந்தபுரம் அருகே நடைபெற்ற உறவினர் ஒருவரது வீட்டுத் திருமணத்திற்குச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் திருமணம் முடிந்து காரில் ஊருக்குத் திரும்பியுள்ளனர்.

நெய்யாற்றின்கரா அருகே உள்ள கடம்பாடகுளம் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது அவர்களுடைய கார் மீது திடீரென எதிரே வந்த அரசுப் பேருந்து பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் காரின் முன்பக்கம் முழுவதுமாக நொறுங்கியதில் ராகுலும், சௌமியாவும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரளாவில் அரசுப் பேருந்தும் காரும் மோதிய பயங்கர விபத்தில் இளம் தம்பதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்கள் இடையில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்திவுள்ளது.