Connect with us

நடக்கவிருக்கும் IPL2020 கிரிக்கெட் போட்டியில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ -‘இந்த 4 பேரையும் கழற்றி விடலாம்’ ?என முடிவெடுத்து இருக்கிறது ……..

NEWS

நடக்கவிருக்கும் IPL2020 கிரிக்கெட் போட்டியில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ -‘இந்த 4 பேரையும் கழற்றி விடலாம்’ ?என முடிவெடுத்து இருக்கிறது ……..

ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்ற ஐபிஎல் டி- 20 கிரிக்கெட் போட்டிகள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அடுத்த ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான்கு சீனியர் வீரர்களை கழட்டிவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அணியில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள் என்பதால், இந்த அணிக்கு டாடி ஆர்மி என்ற பெயரும் உண்டு. அடுத்த வருடம் நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம், வரும் டிசம்பர் மாதம் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. ஏலத்துக்கு முன்னதாக ஒவ்வொரு அணிகளும் தக்கவைக்கும் வீரர்களும், மாற்று வீரர்கள் என இறுதி பட்டியலை தயார் செய்ய வேண்டும்.

அந்த வகையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, அஸ்வினை டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு கைமாற்றியது. அந்த வகையில் சென்னை அணி நிர்வாகம் தங்கள் அணியில் இருந்து நான்கு சீனியர் வீரர்களை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அம்பதி ராயுடு, முரளி விஜய், சார்துல் தாகூர், கேதர் ஜாதவ் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டுவருகிறது.கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முரளி விஜய் இரு வாய்ப்புகளை மட்டுமே பெற்றார். ரூ. 7.8 கோடிக்கு வாங்கப்பட்ட ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ்.

மேலும் கடந்த 2018 ஐபிஎல் தொடருக்கு முன்பாக கரண் சர்மாவை சென்னை அணி ரூ. 5 கோடிக்கு வாங்கியது. இதனையடுத்து கோடி கணக்கில் எடுக்கப்பட்ட வீரர்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதால் அவர்களை ஏலத்துக்கு முன்பான இறுதிபட்டியலில் சேர்க்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக செய்திவெளியாகிவுள்ளது.

Continue Reading
To Top
error: Content is protected !!