12-ம் வகுப்பு மாணவர்கள் பெண் ஆசிரியை வகுப்பறையிலேயே வைத்து தகாத முறையில் நடந்த சம்பவம் CCTV-யில் பதிவான காட்சி தற்போது வைரலாகி வருகிறது

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி நகரில் இருக்கும் காந்தி சேவா நிகேதன் பள்ளியில் பெண் ஆசிரியை ஒருவரை வகுப்பறையிலேயே சக மாணவர்கள் மோசமாக தாக்கியுள்ளனர். அந்த காட்சி அங்கிருந்த CCTV-கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் கூறியது: ஆசிரியை மமதா துபே அடிக்கடி தகாத வார்த்தைகளால் மாணவர்கள் தீட்டிவருவதை வாடிக்கையாக வைத்துள்ளார் மேலும் சம்பவத்தன்று மாணவர்களை அனாதை என்று கடுமையாக திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமான மாணவர்கள் முதலில் ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அதில் ஒரு மாணவன் ஆசிரியையின் பேக்கை தூக்கியெறிந்தார். அதனால் கோவமான ஆசிரியை மீண்டும் மாணவர்களை திட்டியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த மாணவன் ஆசிரியை மமதா துபேவை நாற்காலி எடுத்து மோசமாக தாக்கியுள்ளனர். என்று பள்ளி தலைமையாசிரியர் கூறினார்.

ஆனால் ஆசிரியை மமதா துபேவிடம் இதுகுறித்து கேட்ட போது தலைமையாசிரியர் என்னை பள்ளியில் இருந்து நீக்குவதற்காக பல்வேறு முயற்சித்து வருகிறார் முடியவில்லை அதனால் இதுபோன்ற பொய் புக்கற்கை என் மீது சுமத்தி வருகிறார் என்று கூறியுள்ளார்.