புருஷன் செத்துட்டாருனு பொண்டாட்டியும் செத்துட்டாங்க ? சாவுலகூட ஒண்ணாயிருக்காங்க !…… வைரல் நியூஸ் …..

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி ஏடிகாலனியை சேர்ந்தவர் வெற்றிவேல்(104). இவரது மனைவி பிச்சாயி(100). இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள், பேரப்பிள்ளைகள், கொள்ளுப்பேரப்பிள்ளைகள் என 23 பேர் இருந்துள்ளனர். என்னதான் இத்தனை பேர் சொந்தமாக இருந்தாலும், யாரையும் தொந்தரவு செய்யாமல் இந்த தம்பதிகள் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளனர்.
தன்னுடைய வேலையினை தாங்களே செய்துகொண்டு இருவரும் ஒருவொருக்கொருவர் அளவுகடந்த பாசத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஆனால் சில மாதங்களாக இருவருக்கும் சற்று உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், படுத்தபடுக்கையில் இருந்த இவர்களை பிள்ளைகள் கவனித்துக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெற்றிவேலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மருத்தவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே உயிர்
பிரிந்துவிட்டது. இதனால் அவரது இறுதி காரியத்திற்கு ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்துள்ளது.

 

தனது கணவரின் சடலத்தின் அருகே இருந்து அழுதுகொண்டிருந்த பிச்சாயி திடீரென மயக்கம்போட்டு விழுந்துள்ளார். அவரைப் பரிசோதித்து பார்த்தில் அவரது உயிரும் பிரிந்தது தெரிந்துள்ளது. தற்போது இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதிச்சடங்கு செய்துள்ள குடும்பத்தினர் மீளா சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். வாழும் போது மட்டுமின்றி இறந்த பின்பும் இருவரும் ஒன்றாகவே சென்றுள்ளது அப்பகுதி மக்களுக்கு நெகிழ்ச்சிக் கண்ணீரை வரவழைத்துள்ளது.