நடுஇரவில் பேய் போல் வேடமிட்டு பொதுமக்களை அசச்சுறுத்திய இளைஞர்களின் நோக்கம் என்ன ? ஷாக் கொடுத்த போலிஸார் !

பொதுவாக யாராக இருந்தாலும் எவ்வளவு தரிசாலியாக இருந்தாலும் பேய் என்றால் அனைவர்க்கும் மனதில் ஒருமூலையில் பயம் இருக்கத்தான் செய்யும் , இதனை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கொள்ள நினைப்பார்கள் பலர் , அதுபோலவேய் தங்கள் சேனலை பிரபலமாக்க நடுஇரவில் பேய்வேடம் போடு கொண்டு வழியில் செல்லும் வாகனங்கள் எதிரில் நின்று அச்சப்படுத்தினர் சில யூடுப் சேனலை சேர்ந்த இளைஞர்கள்.

நள்ளிரவில் சாலையில் செல்லும் பொதுமக்களை பேய் போல வேடமிட்டு கேளிக்கை செய்த குற்றச் சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூக்கிபீடியா என்ற யூடுப் சேனலை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். யூடுப் சேனல் வீடியோவிற்காக மக்களை பிராங்க் செய்து பிரபலம் அடைய முயன்றுள்ளனர். ஆனால் இவர்களின் முயற்சி பொலிஸாரிடம் சிக்கவைத்துள்ளது.

யூடுப் சேனலிற்காகவும், தங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கும் நோக்கத்தில் மட்டுமே இதுபோன்ற செயலை செய்ததாக விளக்கம் அளித்துள்ளார். எனினும் இவர்களின் செயலினால் விபத்தோ அல்லது யாருக்கேனும் மரைடைப்பு வந்திருந்தால் என்னவாகி இருக்கும் என்று பொலிஸார் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதேவேளை, இதுபோன்ற செயல்களைச் இனி யாரும் செய்யக் கூடாதென்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.