அந்த ‘5 பேரு’ இவங்க தான்.. ‘அதிகாரப்பூர்வமாக’ அறிவித்த எல்லோ ஆர்மி.. சென்னை சூப்பர்கிங்ஸ் IPLT20 2020

நடக்கவிருக்கும் IPLT20 2020 கிரிக்கெட் விளையாட்டில் வீரர்களை அணிமாற்றம் செய்வது, பிற அணிகளில் இருந்து வீரர்களை எடுப்பது ஆகியவை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. நேற்று முன்தினம் பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், மும்பை அணிகள் தங்களுக்குள் வீரர்களை மாற்றிக்கொண்டன. தொடர்ந்து நேற்று மாலை சென்னை அணி தங்கள் அணியில் இருந்து 5 வீரர்களை இன்று மாலை விடுவிப்பதாக அறிவித்தது. இதனால் அந்த 5 வீரர்கள் யார்? என அறிந்துகொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

இந்தநிலையில் சென்னை அணி தன்னுடைய டீமில் இருந்து சைதன்யா பிஸ்நோய் என்னும் இளம்வீரர் ஒருவரை விடுவிப்பதாக அறிவித்துள்ளது. 25 வயதான இவர் ஹரியானா மாநிலம் சார்பாக கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஆல்ரவுண்டரான இவரை சென்னை அணி ஏலத்தில் எடுத்து இருந்தது. அணியில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் இவர் குறித்து ரசிகர்களுக்கு அதிகம் தெரியவில்லை.

2-வது வீரராக நியூசிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸையும் 3-வது வீரராக டெல்லி வீரரான துருவ் ஷோரியையும், 4-வது வீரராக இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லியையும் சென்னை அணி விடுவித்துள்ளது. அதேபோல 5-வது வீரராக ஹரியானா வீரர் மோஹித் சர்மாவையும் அந்த அணி விடுவித்துள்ளது.இந்த அணி வீரர்கள் பிரிவினையை நேற்று மாலை தான் தீடிரென்று சென்னை அணி வெளியிட்டது .