திருடன் ஒருவனுக்கு பொருட்கள் திருடிய சில நிமிஷத்துலயே தண்டனை கிடைச்சிடுச்சி ! “கர்மா ஒரு பூமராங்” வீடியோ வைரலாக பரவுகிறது சோசியல் வலைத்தளங்களில் …..

“கர்மா ஒரு பூமராங்” என்ற பழமொழியின் அர்த்தம் நம் அனைவர்க்கும் தெரிந்திருக்கும் அந்த பழமொழிக்கு பொருத்தமானதுபோல் தற்பொழுது ஒரு விபத்து நடந்து இருக்கிறது , அதில் சாலையில் ஒரு திருடன் இருவரிடம் பொருட்களை பறித்து வேகமாக மோட்டார் வாகனத்தில் செல்கிறான் அந்த திருடன் சென்ற சில நிமிடங்களிலேயே அவனுக்கு எதிரில் வந்த காரில் மோதி விபத்துக்குள்ளாகிறான் . இந்த காட்சி சாலையில் உள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவானது தற்பொழுது அந்த வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் மோட்டார் பைக்கில் வரும் திருடன் ஒருவன் சாலையில் ஓரமாக நடந்து வந்து கொண்டிருக்கும் ஒருவர் மீது இடித்து அவரை கீழே தள்ளிவிட்டு, மற்றொரு பெண்ணிடம் இருந்து பர்ஸை பறித்துக்கொண்டு வேகமாக செல்கிறான். சில நொடிகளிலேயே எதிர் திசையில் வந்த கார் ஒன்று அந்த திருடனை பைக்குடன் சேர்த்து இடித்து கீழே தள்ளுகிறது.இந்த வீடியோவை பார்த்தவர்கள் அனைவரும் கர்மா ஒரு பூமராங் என்றும், அந்த டிரைவர் திருடனின் செயலைப் பார்த்து விட்டுத்தான் அவ்வாறு செய்கிறார் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.