‘ஆதித்ய வர்மா’ பட ஸ்நீக் பீக் வீடியோ வைரலாக பரவி வருகிறது ! இதுவரைக்கும் 600 நைட்ஸா ? சோஸியல் வலைத்தளங்களில் ……

திரையுலக பிரபல நடிகரான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த உள்ளார் . ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் மூலம் நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்த படத்தை கிரீஸய்யா இயக்கியுள்ளார்.
இ4 எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார். நடிகை பிரியா ஆனந்த் இந்த படத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.

மேலும் முக்கிய வேடத்தில் நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ளார். ரவி.கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ரதன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தில் இருந்து ஸ்நீக் பீக் வெளியாகியுள்ளது.  இந்த வீடியோவை பார்த்த நடிகர் விக்ரமின் ரசிகர்கள் தங்களின் பல கருத்துக்களை சோசியல் வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர் , இந்தப்படத்தின் மூலமாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தமிழ் திரைவுலகில் பிரபலமாவர் என்று எதிர்பாக்க படுகிறது .