” தன் மனைவியின் புகைப்படத்தை ஆபாச படமாக மாற்றி ” சோஸியல் வலைத்தளங்களில் பதிவு செய்த கணவன் ? கைதுசெய்த போலீசார் !…

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மதன் (38). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கும் , செங்கல்பட்டை சேர்ந்த சுமதி (34) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.

இதையடுத்து மதன், வண்ணாரப்பேட்டையிலும், சுமதி, செங்கல்பட்டிலும், தனியாக டெய்லர் கடை வைத்து வந்துள்ளார்.இந்நிலையில், சுமதியின் மீது ஆத்திரத்தில் இருந்த மதன், அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக சித்தரித்து, இணையதளத்தில் வெளியிட்டார். அதில், சுமதியின் செல்போன் நம்பர், முகவரி ஆகியவையும் குறிப்பிட்டு இருந்ததால்,

சிலர், அந்த செல்போனுக்கு தொடர்பு கொண்டு, சுமதியிடம் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் கடந்த 12-ஆம் திகதி, குடிபோதையில் ஒருவர், அவர் வீட்டுக்கு சென்று, தொல்லை கொடுத்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர். அவரை பிடித்து தர்மஅடி கொடுக்க அதன் பின் சுமதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால், பொலிசார் சுமதியின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட கணவன் மதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.