பொதுஇடத்தில் பெண் பத்திரிக்கையாளருக்கு முத்தம் கொடுத்த இளைஞர்? பரபரப்பு வீடியோ வைரலாக பரவிவருகிறது சோஸியல் வலைத்தளங்களில் ……

லெபனான் நாட்டில் ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த அக்டோபர் 17-ஆம் திகதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. லெபனானில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பொறுப்பேற்று கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரி பதவி விலகினார்.

இந்நிலையில் லெபனானின் பிரபல பெண் தொகுப்பாளரான Darine El Helwe இந்த போராட்டம் குறித்து நேரலையில் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென்று அங்கு வந்த போராட்டக்காரர் ஒருவர், கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு சென்றார். லெபனான் நாட்டில் போராட்டக்காரர் ஒருவர் நேரலையில் செய்தியை வழங்கிக் கொண்டிருந்த பெண் தொகுப்பாளருக்கு முத்தம் கொடுத்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.