Connect with us

’15 வயது பள்ளி மாணவி 8 மாதம் கர்பம்’ ?…. வகுப்பறையில் நடந்த விபரீதம் அதிர்ச்சியில் பரிசோதித்த மருத்துவர்கள் !…..

CRIME

’15 வயது பள்ளி மாணவி 8 மாதம் கர்பம்’ ?…. வகுப்பறையில் நடந்த விபரீதம் அதிர்ச்சியில் பரிசோதித்த மருத்துவர்கள் !…..

புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை, வேளாங்கண்ணியை சேர்ந்த குமார் மற்றும் ரூபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தம்பதியின் மகள் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்கூல் ஹாஸ்டலில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் வகுப்பு அறையிலேயே மயங்கியுள்ளார்.அவரை ஆசுவாசப்படுத்திய ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 8 மாதமாக கர்பமாக உள்ளார் என தெரிவித்தனர். இதனை கேட்ட பள்ளி ஆசிரியர்களின் அந்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர் , மேலும் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . அந்த மாணவின் பள்ளிக்கு போலீசார் விரைந்து இந்த செயலுக்கு யார் கரணம் என்று கண்டுபிடிக்க தீவிர விசாரணை எடுக்கப்பட்டு வருகிறது , மருத்துவர்கள் பரிசோதித்ததில் அந்த மாணவி பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறாள் என்று தெரிவித்து இருக்கிறார்கள் .

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவியிடம் விசாரித்தபோது சமீபத்தில் விடுமுறைக்காக வேளாங்கண்ணியில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற அவரை காதலிப்பதாக கூறி சூர்யா என்ற வாலிபர் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் சூர்யாவுடைய நண்பர்களுக்கும் தெரிந்ததால் அவர்களும் தன்னை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்து விட்டதாக கூறினார். மாணவியின் பெற்றோர் வேளாங்கண்ணியில் துப்புரவு பணி செய்துவருகின்றனர். இதனால் அவர்கள் வேலைக்குச் சென்று விடும் நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சூர்யா உள்ளிட்ட கூட்டாளிகள் நான்கு பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Continue Reading
To Top
error: Content is protected !!