குடிபோதையில் தன் மகள் என்றுகூட நினைவு இல்லாமல் மகளிடமே கொடூர செயல் புரிந்த தந்தை ? தெருமக்கள் அவரை அடித்து உதைத்த வீடியோ கட்சி வைரலாக பரவிவருகிறது …..

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள கொடிமரத் தெருவில் வசித்துவருபவர் அப்துல் சமத் 37 வயது . இவரது மனைவி மும்தாஜ். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதும், மனைவி குழந்தைகளை அடிப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். தொடர்ந்து மனைவி மும்தாஜை சித்திரவதை செய்ததால் அவர் அந்தப் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தஞ்சமடைந்தார். ஆனால் அப்துல் சமத் மனைவியுடன் மகள்களை அனுப்ப முடியாது என மறுத்துவிட்டார். இந்நிலையில் புதன் கிழமை மாலை பள்ளி முடிந்ததும் தனது தாயைப் பார்த்துவிட்டு வந்துள்ளார் 9 வயதான அவரது மூத்த மகள்.

இதனை தெரிந்து கொண்ட தந்தை மறுநாள் காலையில் குடி போதையில் அந்த சிறுமியை அப்துல் சரமாரியாக தாக்கியுள்ளார். சிறுமி அலறியடித்து தெருவுக்கு ஓடிவந்தபோதும் அவர் விடாமல் துரத்தி அடித்துள்ளார். அதைத் தடுக்க முயன்ற அக்கம் பக்கத்து வீட்டினரையும் அடிக்கச் சென்றுள்ளார். சிறுமியை கீழே தள்ளிவிட்டு கழுத்தில் மிதித்தும், டியூப்லைட் கொண்டு கொடூரமாக தாக்கியும் உள்ளார். இந்தக் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.

ஒரு கட்டத்தில் சிறுமி பலமாக தாக்கப்பட்டதை பார்த்த அங்கிருந்தவர்கள் அப்துல்லை தாக்கினர். அதோடு காவல்துறையினரிடமும் புகார் அளித்தனர். இதனால் அப்துல் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.மதுரை சிறையில் அடைத்து வைத்தனர் , திருமங்கலத்தில் குடிவெறியில் பெற்ற மகளை நடுத் தெருவில் வைத்து கொடூரமாக தாக்கிய தந்தையின் செயலை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .