Connect with us

பெட்ரோல், டீசல் இன்று விலை உயர்வு நிலவரம்? இதுக்கு ஒரு முடிவே கிடையாதா -அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள் !….

NEWS

பெட்ரோல், டீசல் இன்று விலை உயர்வு நிலவரம்? இதுக்கு ஒரு முடிவே கிடையாதா -அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள் !….

நம் வாழ்வில் அன்றாட உபயோகிக்கும் பொருட்களில் ஒன்று வாகனத்திற்கு பயன்படும் பெட்ரோல் மற்றும் டீசல் .அது நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  “பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.68, டீசல் லிட்டருக்கு ரூ.69.54ஆக விற்பனை”. பெட்ரோல், டீசல் விலை மாதந்தோறும் இருமுறை மாற்றி அமைக்கும் நடைமுறை பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு அதிகரித்து விடுகிறது.

தொடர்ந்து அதிரடி ஏற்றங்களைக் கண்டு வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.76.68ஆக விற்கப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் எந்த மாற்றமும் இன்றி, லிட்டருக்கு ரூ.69.54ஆகவும் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை நிர்ணயம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்றைய விலையால் வாகன ஓட்டிகள் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களைக் கண்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

Continue Reading
To Top
error: Content is protected !!