ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு …… இனிமேலாவது பயப்படவேண்டும் இந்த தவறை செய்ய ……

தென் ஆப்பிரிக்காவில் நீண்ட காலமாகவே பாலிய அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.கடந்த சில மாதங்களில் மட்டும் படுகொலைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கல்லூரி மாணவியை துஸ்பிரயோகம் செய்து கொன்ற குற்றவாளிக்கு தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் மூன்று ஆயுள்கால தண்டனைகளை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு மட்டும் தென்னாப்பிரிக்காவில் கிட்டத்தட்ட 40,000 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் கல்லூரி மாணவி துஸ்பிரயோகிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்ற வழங்கியிருக்கும் தீர்ப்பு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் என வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென் அப்பிரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி உயினேன் மிருவேட்டியானா (19), கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி.யன்று தனக்கு வந்த பார்சல் பற்றி விசாரிப்பதற்காக கேப்டவுன் தபால் நிலையதிற்கு சென்றுள்ளார். அங்கு வேலை செய்த 42 வயதான முன்னாள் தபால் நிலைய ஊழியரான போத்தா, மாணவியை வலுக்கட்டாயமாக துஸ்பிரயோகம் செய்துள்ளார். மேலும் கடினமான பொருளால் மாணவியின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு, உடலை பாதுகாப்பான அறைக்குள் வைத்து பூட்டியுள்ளார்.

இந்த நிலையில் சாட்சியங்கள் அனைத்தும் விசாரித்த நிலையில், குற்றவாளிக்கு மூன்று ஆயுள்கால தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பினை நாட்டு மக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக கூறியுள்ளனர்.இந்த தவறான செயலை இனிமேலாவது மற்றவர்கள் செய்ய அச்சப்படவேண்டும் இந்த தண்டனையை பார்த்தாவது என்று பலர் தங்கள் கருத்தினை பதிவு செய்து வருகிறார்கள் .