பதறவைக்கும் சித்திரவதை ! தண்ணீருக்கு பதில் சிறுநீரகத்தை குடிக்கவைத்து கொலை ?… 3 மணிநேரம் கட்டிவிட்டு கொடூரம் …..

பஞ்சாப் மாநிலம்  ஜக்மாலே சிங் (37). கூலித்தொழிலாளியான இவரை கடந்த 7ம் தேதி அதே கிராமத்தை சேர்ந்த நான்கு பேர் கொண்ட கும்பல் மரத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். சுமார் 3 மணிநேரமாக ஜக்மாலேவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். அப்போது வலிதாங்க முடியாமல் கதறிய அவர், தண்ணீர் கேட்டு கெஞ்சியுள்ளார். ஆனால் அந்த கும்பல் சிறுநீரை குடிக்க கொடுத்து கட்டாயப்படுத்த பட்டு சாலையில் வீசியுள்ளனர். சிகிச்சைக்கு பணமில்லாமல் சம்பவம் நடந்து மூன்று நாட்களாக வீட்டிலேயே இருந்துள்ளார். ஆனால் உடல்நிலை மோசமானதால் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் 13ம் தேதி ஜக்மாலே போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘ரிங்கு என்பவர் அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு என்னை மரத்தில் கட்டி வைத்து சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக தாக்கினார்கள். ரிங்கு என் கைகளை பிடித்து கொண்டார். அவரது தந்தை அமர்ஜீத் சிங் சிறிய உருளையை கொண்டு என்னை கடுமையாக தாக்கினார். நான் ரிங்குவிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டேன். பாத்ரூம் சென்றவர் சிறுநீரை பிடித்து குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார். நான் மறுக்கவே அடித்து குடிக்க வைத்தனர்’.ஜக்மாலேவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ரிங்கு, அமர்ஜீத் சிங், லக்கி, பிந்தேர் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜக்மாலே பட்டியலினத்தை சேர்ந்தவர் ஆகவே கடுமையாக தாக்கப்பட்டதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜக்மாலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் போலீசாரிடம் தெரிவிக்கையில், ‘ஜக்மாலேவை மரத்தில் கட்டிவைத்து தாக்கினர். இரும்பு ராடு மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கியதில் கால்கள் உடைந்துவிட்டன.  காயமான பகுதியில் ஸ்க்ரு டிரைவரைக் கொண்டு குத்தி சித்ரவதை செய்தார்கள். அவர் வலியால் கதறும்போது காயம்பட்ட இடத்தில் ஆசிட் ஊற்றினார்கள். குடிக்க தண்ணிர் கேட்டபோது சிறுநீரை குடிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்’ என தெரிவித்துள்ளார்.