‘சபரிமலைக்கு மாலைபோட்டுட்டு செய்யற வேலையா’ இது..? சிம்புவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!!

நடிகர் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு சபரிமலைக்கு மாலைபோட்டுக்கொண்டு ஸ்டார் ஹொட்டலில் இரவு உணவு சாப்பிட்டதை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். மாநாடு படத்திலிருந்து சர்சசையில் சிக்கிய சிம்பு தற்போது சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார். தனது விரதத்தினை முடித்துவிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் சிம்புவின் நெருங்கிய நண்பர் பிக்பாஸ் மஹத், சிம்புடன் இரவு உணவு சாப்பிட்டதாக புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தார். அதில் டின்னர் டம் வித் சுவாமி என்று தெரிவித்திருந்தார்.

சில ரசிகர்கள் புகைப்படத்தினைப் பார்த்து நல்ல விதமாக கருத்து கூறியிருந்தாலும், பலரும் தங்களது வெறுப்பினையே காட்டி வருகின்றனர். ஸ்டார் ஓட்டல்ல விரதம் இருக்கிறாரு.. பாத்ரூம்ல டப்பிங் பேசுறாரு.. சூட்டிங் வர்ரத தவிர மத்த எல்லாம் கரெக்டா பண்றாரு.. இன்னுமா இவனுங்கள உலகம் நம்புது.. என தெரிவித்திருக்கிறார் நபர் ஒருவர்.

மற்றொருவர் எவ்வளவு திறமை இருந்தாலும் தலைகனம் வாழ்க்கையை மாற்றி விடும்.சிம்புவின் வெறி தன ரசிகன் நான்…ஆனால் அது சிம்புவை நேரில் பார்த்த நொடிக்கு முன் வரை என்று ஆனது.சிறிய புன்னகை அல்லது ரசிகன் பக்கம் பார்வை என்று இல்லாமல் நான் வாங்கிய ஆட்டோகிராப் கிழித்து தான் எறிந்தேன். என்று கூறியுள்ளார். இப்படி பல ரசிகர்கள் அவரது இந்த புகைப்படத்தை பார்த்து தங்களது கருத்துக்களை சோசியல் வலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள் இத்தனை கிண்டலும் கேலியும் நடிகர் சிம்புவிற்கு இது தேவைதானா என்று பலரும் பதிவிட்டு உள்ளனர்.