6 நாட்கள் கஷ்டப்பட்டு கைப்பற்றிய பின்லேடன் யானை இறந்தது ? அதிர்ச்சியில் ஊர்மக்கள் !…

இந்தியா ,குவாஹாத்தியில் உள்ள மதம் பிடித்த யானை காட்டு பகுதியை விட்டு மக்கள் இருக்கும் பகுதிக்கு வந்து நாசம் செய்தது அந்த மதம் பிடித்த காட்டு யானையின் பெயர் பின்லேடன் , மதம்பிடித்து ஓடி அசாம் மாநிலத்தில் துவம்சம் செய்த யானை பின்லேடன் திடீரென உயிரிழந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அசாம் மாநிலம் கோல்பரா மாவட்டத்தில் உள்ள ரோங்ஜலி வனப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஒன்று 2 வாரத்திற்கு முன்பாக ஊருக்குள் புகுந்தது. குடிசைகளை அழித்து, மக்களை அச்சுறுத்தியதை தொடர்ந்து அதனை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

மதம் பிடித்த யானைக்கு மக்கள் ‘ஒசாமா பின் லேடன்’ என்று பெயர் சூட்டியிருந்தனர். இதையடுத்து பின்லேடனை பிடிக்க நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டனர். கும்கி யானைகளின் உதவியோடு ஒசாமா கடந்த 11-ம்தேதி பிடிக்கப்பட்டான். பின்னர் அதனை ஓரங் தேசிய உயிரியல் பூங்காவுக்கு கடந்த 12-ம் தேதி வனத்துறையினர் மாற்றினர். ஒசாமா அமைதிக்கு திரும்பியதை தொடர்ந்து அசாம் மக்கள் அதனை கிருஷ்ணா என்று அன்போடு அழைத்தனர். யானையை காட்டுக்குள் விடலாம் என வனத்துறையினர் கருதிய நிலையில் அதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மீண்டும் யானை ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்யலாம் என்ற அச்சத்தில் மக்கள் இருந்தனர். இதனால், யானை தொடர்ந்து உயிரியல் பூங்காவில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலை 5.30-க்கு யானை ஒசாமா உயிரிழந்தது. இதனையறிந்த அசாம் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். யானையை உடற்கூறு ஆய்வு செய்யும் நடவடிக்கையில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர்.