முஸ்லீம் சட்ட வாரியத்தால் சீராய்வு மனுத்தாக்கல் செய்ய முடியாது ?மாறாக சன்னி வக்ஃப் வாரியத்திற்கு இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது ! முஸ்லிம்கள் போராட்டம் ….

மசூதிக்கு பதிலாக எந்த நிலத்தை வழங்கினாலும் ஏற்க முடியாது” என்று சட்ட வாரியம் இன்று தெரிவித்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு -அயோத்தி கோயில் நில விவகாரத்தில் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் இன்று தெரிவித்துள்ளது. ஒரு மாதத்திற்குள் மறு ஆய்வுமனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கரை ஒரு கோவிலுக்கு ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மசூதிக்கு 5 ஏக்கர் நிலத்தை முக்கிய இடத்தை வழங்க உத்தரவிட்டதையும் குறிப்பிட்டு. “மசூதிக்கு பதிலாக எந்த நிலத்தை வழங்கினாலும் ஏற்க முடியாது” என்று சட்ட வாரியம் இன்று தெரிவித்துள்ளது. அதனால் முஸ்லீம் சட்ட வாரியத்தால் அயோத்தி தீர்ப்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய உரிமை இல்லை என்று வழக்கறிஞர் வருண் சின்ஹா தெரிவித்துள்ளார்.

“உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்துள்ளது. முஸ்லீம் அமைப்பினால் சர்ச்சைக்குரிய தளம் மற்றும் கட்டமைப்பினை தங்களின் பிரத்யேக உடைமையை நிறுவ முடியவில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது” என்று சின்ஹா தெரிவித்துள்ளார்.அரசியலமைப்பில் 142 வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.இதில் முஸ்லீம் சட்ட வாரியம் எப்படி அதில் உள்ள பிழையினை கண்டறியப் போகிறது என்பது புரியவில்லை என்று சின்ஹா தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலாக எடுத்து செய்யப்போவதில்லை. மாறாக சன்னி வக்ஃப் வாரியத்திற்கு இந்த நிலம் வழங்கப்பட்டுள்ளது.பெரும்பாலான வழக்கறிஞர்கள் மறு ஆய்வு மனுவை விரும்புகிறார்கள் என்று சட்ட வாரியம் கூறியது.